அமெரிக்காவின் தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளது.
7.1 ரிச்டர் அளவில் இலங்கை நேரப்படி இன்று முற்பகல் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இதுவரையில் எந்தவித சுனாமி எச்சரிக்கைகளும் விடப்படவில்லை என அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் எவையும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.
இதேவேளை, நேற்று நள்ளிரவு தெற்கு கலிஃபோர்னியா பகுதியில் 6.4 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
