பாறுக் ஷிஹான்
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் முஸ்லிம் மக்களால் கவனயீர்ப்பு போராட்டமொன்று மேற்கொள்ளப்பட்டது.
குறித்த போராட்டம் நேற்று (9) யாழ். மாநகர சபையினால் ஐந்து சந்திப்பகுதியில் அமைக்கப்படும் கம்பங்களை அகற்றுமாறு கோாியே இந்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில்,
யாழ். மாநகரசபை மின்கம்பங்களை பொருத்துவதாக பொய்யுரைத்து கதிா்வீச்சுக் கூடிய 5G தொழிநுட்ப கம்பங்களை நாட்டுகின்றது.
மனித உயிா்கொல்லியான அந்த கம்பங்கள் எமக்கு தேவையில்லை என்றும் தெரிவித்தனர்.
இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உயிரினங்களுக்கு ஆபத்தான 5G கோபுரத்தை எதிர்ப்போம், வேண்டாம் வேண்டாம் 5G டவர் வேண்டாம் உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாக்கியிருந்தனர்.



