ஜோர்ஜியாவுக்கான ரஷ்ய விமான சேவைகள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளன.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் உத்தரவுக்கமைய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரஷ்ய சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஜோர்ஜிய நாடாளுமன்ற சபாநாயகரின் ஆசனத்தில் அமர்ந்து உரையாற்றிய சம்பவத்தை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஜோர்ஜியாவுக்கான ரஷ்ய விமான சேவைகள் அனைத்தும் எதிர்வரும் ஜூலை மாதம் 8 ஆம் திகதியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்தியுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி ஆவணமொன்றில் கையெழுத்திட்டுள்ளார்.

