தீவிரவாதத்துடன் எவ்விதமான தொடர்பபும் இல்லை -பொலிஸ் அறிக்கை

0


தீவிரவாதத்துடன் தொடர்பிருப்பதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் ஆளுநர்களான அசாத் சாலி, எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியுதீனுக்கு ஆகியோர்கள் மீது எவ்வித குற்றச்சாட்டுகளோ அவர்களுக்கு எதிராக தீவிரவாதத்துடன் தொடர்புபட்ட எவ்வித முறைப்பாடுகளும் இல்லையென சபாநாயகருக்கு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

இவர்கள் தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட விசேட பொலிஸ் குழுவினரால் இந்த அறிக்கை சபாநாயகருக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேல் மாகாண ஆளுநராகயிருந்த அசாத் சாலி மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் மற்றும்
அமைச்சர் ரிசாத் பதியுதீன் ஆகியோர் தீவிரவாதத்தை ஆதரிப்பதாகவும் அவர்களை பதவி நீக்கவேண்டும் எனக் கோரி அத்துராலியே ரதன தேரர் உண்ணாவிரதமிருந்த அதேவேளை பல இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் குறித்த மூவர் உட்பட அமைச்சுப் பதவிகளை வகித்த முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலகியிருந்தனர்.

ஜுன் 5ம் திகதி முதல் 12ம் திகதி வரையான ஒரு வார காலம் முறைப்பாடுகளை வழங்க கால அவகாசம் வழங்கப்பட்டு, டிஐஜி KD பிரியந்த தலைமையில் மூவர் கொண்ட விசேட பொலிஸ் குழுவொன்று இதற்கென நியமிக்கப்பட்டிருந்தது.

குறித்த மூவருக்கும் எதிராக எவ்வித முறைப்பாடுகளும் இல்லாத நிலையில் அவர்களின் மீது பொய்யான முறையில்
தீவிரவாதத்தோடு தொடர்பு இருப்பதாகக் கூறி முன்னெடுக்கப்பட்ட விடயங்களில் எவ்வித தொடர்புமில்லையென சபாநாயகருக்கு தெளிவு படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top