அத்துருகிரிய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனமொன்றிலிருந்து நபரொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று அதிகாலை மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
காவல்துறை அவசர தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மாலபே பகுதியைச் சேர்ந்த 48வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

