கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு இருவர் பலி

0

திஸ்ஸமஹாராம பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நிகழ்வொன்றில் கலந்து  கொண்டதன் பின்னர் வீடு திரும்பிய போதே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது,  காயமடைந்த   குறித்த நபர்  தெபரவெவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை பலனின்றி  உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திஸ்ஸமஹாராம காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, பூகொட பகுதியில் கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலுக்கு அமைய காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர். 

இருவரிடையே காணப்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் காரணமாக இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பூகொட காவல்துறையினர் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். 
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top