காற்று, மழையுடன் கூடிய நிலைமை தொடரும்

0

நாடு முழுவதும் தற்போது காணப்படும் காற்றுடன் கூடிய நிலைமையும் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடன் கூடிய நிலைமையும் அடுத்த சில தொடரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் மணித்தியாலத்துக்கு 50-60 கிலோமீற்றர்  வேகத்தில் பலத்த காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது. ஏனைய பிரதேசங்களில் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில்  பலத்த காற்று வீசும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
கொழும்பு, காலி மற்றும் கம்பஹா மாவட்டங்களின்சில இடங்களில் 50 மில்லிமீற்றர்  மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top