முஸ்லிம்களுக்கு எச்சரிக்கை #விடுத்த - கருணா அம்மான்

0


கிழக்கு மாகாணத்தில் இருக்கும் நீண்ட கால பிரச்சனை தான் தமிழ் பிரதேச செயலகத்தை பிரித்து தரமுயர்த்தும் செயற்பாடுளுக்கு முஸ்லீம் அரசியல் வாதிகள் தடையாக இருக்கின்றார்கள்.

முஸ்லிம் மக்களின் ஏகாதி பத்தியத்தை அடக்கவேண்டும். தமிழ் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த பிரச்னைக்கு முகம் கொடுக்கவேண்டும் என்று முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கல்முனையில் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் 3 ஆவது நாளாகவும் இன்று (19) தொடர்கின்ற நிலையில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயக மூர்த்தி முரளிதரன் அங்கு வருகைதந்து அவர்களோடு கலந்துரையாடிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது இவ்வாறு  தெரிவித்துள்ளார்.

உண்ணா விரதத்தை ஆரம்பித்த தேரருக்கு தமிழ் மக்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகக் கூறிய அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இன்று முஸ்லீம் பயங்கரவாதம் தலைவிரித்து ஆடுகிறது. தற்கொலை சம்பவம் தொடர்பில் இவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணையில் சந்தேகம் இருக்கிறது. குறித்த விசாரணையை குற்ற புலனாய்வு துறையினால் மேற்கொள்ளப்பட வேண்டும்.

தமிழ் மக்களை பிளவு படுத்தி இனத் துவேசத்தை கொண்டுவந்து எம்மை பிரிப்பார்களாக இருந்தால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்.

முஸ்லீம் மக்கள் சந்தோசமாக வாழவேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களின் உரிமையில் தலையிடுவதை முதலில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top