அடையாளம் தெரியாத இருவரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சுட்டுக் கொலை தொடர்பில் மேலதிக விசாரணை

0

களனி - லுன்கங்கொட சந்திக்கருகில் நகைக்கடை உரிமையாளர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் தேடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் சென்ற, அடையாளம் தெரியாத இருவரால், நகைக் கடையினுள் இருந்த அதன் உரிமையாளர் மீது நேற்று பிற்பகல் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டிருந்தது.
துப்பாக்கிப் பிரயோகத்தின் பின்னர் இரண்டு சந்தேகநபர்களும் அங்கிருந்து தலைமறைவாகியதாக காவல்துறை ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நகைக்கடை உரிமையாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்த துப்பாக்கிப் பிரயோக சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
எனினும், சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்கான துரித விசாரணைகளை களனி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top