முஸ்லிம்களுக்கு தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு – மங்கள

0

தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதித்துள்ளமைக்கு நிதி அமைச்சர் மங்கள சமரவீர கண்டனம் தெரிவித்துள்ளார். 

வடமேல் மாகாணம் தங்கொட்டுவ வார சந்தையில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட முஸ்லிம்களுக்கு வென்னப்புவ பிரதேச சபை தடை விதிப்பதாக வென்னப்புவ பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா நேற்று அறிவித்திருந்தார்.

இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள நிதி அமைச்சர் மங்கள, “மஹிந்த ராஜபக்ஷ அணியினரின் பிரதேசசபையில் தடை விதித்திருப்பது இனவெறியை தூண்டும் செயற்பாடு” என பதிவிட்டுள்ளார்.

முஸ்லிம் தரப்பினருடன் இணைந்து வியாபாரம் செய்வதனால் பாதுகாப்பினை உணரவில்லை, எனவே பாதுகாப்பு காரணங்களுக்காகவே இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பிரதேச சபைத் தலைவர் சுசந்த பெரேரா பிரதேச அரச அதிகாரிகளுக்கு அறிவித்திருத்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இது தொடர்பாக இன்றைய ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இவ்வாறு உணர்ச்சிவசப்பட்டு சில தரப்புக்களினால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் தொடர்பாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை எனவும் அவை காலப்போக்கில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்றும்” கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top