பண்டாரவளை கினிகம பகுதியில் புத்தக விற்பனை நிலையமொன்றில் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த தீப்பரவல் காரணமாக 5 இலட்சம் ரூபாவுக்கு அதிக பெறுமதியுடைய உடைமைகள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தீப்பரவல் இன்று அதிகாலை ஏற்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிடுகின்றனர்.
மின் ஒழுக்கின் காரணமாகவே இந்த சம்பவம் நேர்ந்துள்ளதாக காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

