அவர்களும் ஒருவார்த்தை சொன்னார்கள்,... மஹிந்தவும் ஒருவார்த்தை சென்னார்..

0


அந்த வார்த்தைதான் நீ தலைவன் என்பதை நிரூபித்த வார்த்தை தலைவா..!

அவர்கள் மூதூரை தாக்கியழித்து, அந்த மக்களை ஊரோடு விரட்டிவிட்டு சொன்னார்களே ஒரு வசனம் அந்த வசனம் இதுதான் " மூதூர் மட்டுமல்ல கிழக்கு மாகாணத்தை விட்டே முஸ்லிம்களை துரத்தியடிப்போம் என்று"

மூதூர் மக்கள் தாக்கப்பட்டு, கூண்டோடு வெளியேற்றப்பட்ட நேரம், யாழ் முஸ்லிம்களின் நிலைதான் நமக்கும் நடக்கப்போகின்றதோ என்று கைசேதப்பட்டுக் கொண்டிருந்தபோது, கந்தளாய் வந்த அந்த மஹிந்த என்னும் தலைவன் சொன்னான் ஒருவசனம் அந்த வசனம் இதுதான் " முஸ்லிம் மக்களே நீங்கள் பயப்படாதீர்கள், இன்றிலிருந்து மூன்று மாதத்துக்குள் உங்களை மூதூரில் குடியமர்த்துவேன்"  என்று வாக்குக் கொடுத்தான் அந்த தலைவன்.

அந்த தலைவன் அந்த வாக்கை கொடுக்கும்போது புலிகள் மட்டுமல்ல, அவர்களோடு சேர்ந்த எலிகளும் எள்ளிநகையாடினார்கள். அதே போன்று முஸ்லிம் சமூகமும் நடக்கின்ற கதையாயிது  என்று நம்பிக்கையிழந்து முஸ்லிம் ஊர்களை நோக்கி தஞ்சமடைய துவங்கினார்கள். யாழ் முஸ்லிம்களுக்கு நடந்த கதைதான் நமக்கும் நடந்துவிட்டது, இனி நமது ஊர் நமக்கல்ல, நமது கதை முடிந்தது, என்று மனம் உடைந்துபோய் கிடந்தோம் நாம்.

அப்போதுதான், நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு தெற்கிலே "கம்முதாவா"  நடத்தும் தலைவன் அல்லடா  நான் என்பதை நிரூபித்தார் அந்த தலைவன். சொன்னபடி செய்தார் மூன்று மாதத்தில் மூதூரை மீட்டெடுத்தார், முஸ்லிம்களுக்கு நிம்மதியை தேடிக்கொடுத்தார். புலிகளுக்கு பேரிடியைக்கொடுத்தார். 

அன்று அந்த தலைவன் மற்ற தலைவர்களைப்போல் நமக்கு ஏன் வம்பு, நமக்கு ஏன் மேற்குலகின் பகை, நமக்கு ஏன் கெட்ட பெயர், நமக்கு ஏன் ஒரு இனத்தின் சாபம்,  என்று நினைத்து புலிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுக்காது ஒதுங்கியிருந்தால், அன்றய நிலையில் யாரும் மஹிந்தவை விமர்சித்திருக்கவும் முடியாது, குற்றம் சுமத்தியிருக்கவும் முடியாது. அவரும் அவரது காலத்தை ஒய்யாரமாக கழித்துவிட்டு "நல்ல ஜனாதிபதி" என்ற பட்டத்தோடு ஓய்வுக்கு சென்றிருந்தால் இன்று நமது நிலை என்ன என்பதை முஸ்லிம் சமூகமும், அவர்களை வழிநடத்திய முஸ்லிம் தலைவனும் உணர்ந்து கொள்ளவில்லை என்பதே மனவேதனையான விடயமாகும்.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்து நாட்டிலே அமைதியையும், முஸ்லிம்களுக்கு நிம்மதியையும், தமிழ் மக்களுக்கு விடுதலையையும் பெற்றுத்தந்த அந்த தலைவனுக்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததற்கு நியாயம் இருந்தது. ஆனால் நமது மக்கள் அந்த முஸ்லிம் தலைவனின் கதையைக்கேட்டு சரத்பொன்சேகாவுக்கு வாக்களித்தார்கள். அப்படி எதற்காக இவர்கள் செய்தார்கள் என்று இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கின்றது. இந்த யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர உதவிசெய்த முஸ்லிம் நாடுகள்கூட இவர்களின் செயல்பாடு கண்டு வியந்து நின்றனர். 

ஆகவே முஸ்லிம்கள் என்றால் அவர்கள் 'தொப்பிபிரட்டிகள்' என்ற பொய்யான ஒரு வசனத்தை உண்மைப் படுத்திவிட்டார்கள் என்று நடுநிலைவாதிகள் கூறும் அளவுக்கு நமது நிலை சென்றது.

நாம் எந்த தலைவனை எப்படி மதிக்கவேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்று புரிந்திருந்தால் நாம் இருக்கவேண்டிய நிலைவேறு என்பதை இன்றும் நமது சமூகம் புரிந்து கொள்ளவில்லை, அதனை உணராதவரை நமக்கும் நமது சமூகத்துக்கும்  விடிவு என்பது காணல்நீர்தான் என்பதே கசப்பான உண்மையாகும்.

எம்எச்எம்.இப்றாஹிம்.
கல்முனை.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top