பௌத்த மதத்தை இலங்கையின் அரச மதமாக பிரகடனப்படுத்த வேண்டும் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
கெட்டம்பே ராஜோபவனாராமாதிபதி கெப்பட்டியாக சிறிவிமல தேரரிடம் ஆசீர்வாதம் பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு நேற்று கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளும் ஒன்றாக இணைந்து செயற்பட வேண்டுமெனவும் கலகொட அத்தே ஞானசார தேரர் கூறியுள்ளார்.

