பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கம்

0


ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன பதுளை மாவட்ட அமைப்பாளர் பதவியிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இவருக்குப் பதிலாக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தேனுக விதானகமகே புதிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுன கட்சிக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்ததனாலேயே இவர் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுஜன பெரமுனவுக்கு கோட்டாபய ராஜபக்ஸ தலைவராக வரக்கூடாது என்ற கருத்தை இவர் தொடர்ந்தும் தெரிவித்து வந்தமையே இதற்குக் காரணம் என தெரியவருகின்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பதுளை மாவட்ட சம்மேளனம் அதன் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண, உள்ளுராட்சி சபை உறுப்பினர்களின் பங்குபற்றுதலுடன் பதுளை சைமன் பீரிஸ் மாநாட்டு மண்டபத்தில் நேற்று (29) மாலை நடாத்திய கூட்டத்தில் இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம, கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது பதுளை மாவட்ட அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top