நாட்டில் ஏற்பட்ட அசிங்கமான நிகழ்வு அபிவிருத்திக்கு தடையல்ல

0

A.H.HASFAR HASFAR

நாட்டில் ஏற்பட்ட அசிங்கமான நிகழ்வு அபிவிருத்திக்கு ஒரு போதும் தடையாக அமையாது பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நடை முறைப்படுத்துவதற்கு சகல திணைக்களத் தலைவர்களும் உறுதி பூண வேண்டும் என பிரதியமைச்சர் அப்துல்லா மஃறூப் தெரிவித்தார்.

கிண்ணியா பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக் கிழமை இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர் 

நாட்டின் சட்டதிட்டங்களையும் பாரிய தாக்குதலையும் நடாத்தி விட்டு நாசகார வேலைகளை பார்த்தவர்களை ஒரு போதும் எம்மால் எமது மார்க்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாது.

கடந்த நல்லாட்சி அரசின் 52 இருண்ட யுகத்தில் தாங்கள் தத்தளித்துக் கொண்டிருந்த போது அதனை சிறுபான்மை சமூகம் சார்பிலும் கட்சியின் தலைமை என்ற வகையிலும் அரசாங்கத்தை பாதுகாத்தவர் அமைச்சர் றிசாத் பதியுதீன் .

முஸ்லிம் சமூகத்தை தப்புக் கணக்கு போட்டு அரசியல் தலைமைகளையும் வங்குரோத்து அரசியல்வாதிகளாக பொதுபலசேனா, ராவண அமைப்புக்கள் செயற்படுவது இனக்குரோதங்களை வளர்ப்பதற்கு சமனாகுகிறது.

எமது சமூகம் உள்ளிட்ட ஏனைய சமூகமும் ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் நிரந்தர சமாதானத்தையும் விரும்புபவர்கள்  இதை விடுத்து அரச திணைக்கள அதிகாரிகள் அபிவிருத்திகளுக்கு இனக்குரோத வகையில் செயற்படும் வகையில் யாரும் நடந்து கொள்ள வேண்டாம் என இதனை ஒரு அரசியல் தலைமை என்ற வகையில் பணிவாக இச் சபையில் கூறிக்கொள்ள விரும்புகிறேன் .
கிண்ணியாவில் ஒரு இலட்சத்திக்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் இங்கு ஐஎஸ் ஐஎஸ் என்கிற பயங்கரவாதிகளோ அமைப்புக்களோ இல்லை என்பதை முப்படைகளுக்கு தெளிவாக எடுத்துக்கூறியிருக்கிறோம் ஒரு போதும் அவ்வாறான நிகழ்ச்சிகளுக்கு துணை போகவோ போராட்டங்களை முன்னெடுக்கவோ இடமளிக்க மாட்டோம்.

எனவேதான் அபிவிருத்திப் பணிகளை நடை முறைப்படுத்துவதன் ஊடாக திருகோணமலை மாவட்டம் மட்டுமல்ல நாட்டின் அந்நிய செலவாணிக்கும் பாரிய பங்குகளை வழங்க முடியும் துறை முக அபிவிருத்தி இரு வருட துரிதகதியிலான அபிவிருத்தி முன்னெடுப்புக்கள் ஊடாக நடை முறையாக்கப்படவுள்ளது இது போன்ற கிண்ணியா உப்பாறு பகுதியில் நைடா தொழில் பயிற்சி நிலையத்தை உருவாக்க 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது இது போன்று பல்கலைக்கழக கல்லூரி உருவாக்கம் மற்றும் இதனால் 3000 இளைஞர்களுக்கான தொழில் வழிகாட்டல் பயிற்சிகள் அழிக்கப்பட்டு வேலை வாய்ப்பினையும் அங்கு உருவாக்க முடியும்.

கடந்த கால யுத்த வடுக்களை மறந்தும் ஒரு சமூகத்தின் தலைமையை தாக்க முற்பட்டும் சிலர் பொய் பிரச்சாரங்களை செய்கின்றார்கள் இதில் சில ஊடகங்கள் ஊடக தர்மங்களை மறந்து செயல்படுவது இனரீதியான வன்முறைகளை தூண்டச் செய்கிறது இதனை நிறுத்த வேண்டும் .
சிறுபாண்மை மக்களின் குரல்களை நசுக்க நினைப்பவர்கள் அன்றைய  30 வருட கால சூழ் நிலையின் மனதாக்கங்களை மீட்டிப்பார்க்க வேண்டும் இதற்காக உயர் மட்ட அரச அதிகாரிகள் இவ்வாறான குரோதங்களுக்கு இடமளிக்காமல் தங்களது பணிகளை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்றார்.
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top