12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 14ஆவது போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில் அவுஸ்ரேலியா மற்றும் இந்தியா ஆகிய அணிகள் மோதிக் கொள்ளவுள்ளன.
இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி இன்று பிற்பகல் 3 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.
12 ஆவது உலகக் கிண்ண போட்டியில் அவுஸ்ரேலிய அணி 3 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் தரப்படுத்தலில் மூன்றாம் இடத்திலுள்ளது.
இதுவரையில் ஒரு போட்டியில் மாத்திரம் விளையாடியுள்ள இந்திய அணி அந்த போட்டியிலும் வெற்றி பெற்று 2 புள்ளிகளை பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

