நைஜீரியாவில் எரிவாயு உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் இடம்பெற்ற வெடிச்சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த நிறுவனத்தில் பராமரிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், எரிவாயு குழாய் ஒன்று வெடித்ததிலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.
இதன்போது மேலும் பலர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

