மேல் மாகாண சபையின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது

0

மேல் மாகாண சபையின் பதவிக் காலம் நாளையுடன் நிறைவடையவுள்ளது.

இதன்படிமேல் மாகாண சபை நாளை முதல் ஆளுனரின் கீழ் கொண்டுவரப்படவுள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளைதென் மாகாண சபையின் பதவிக்காலம் ​கடந்த 10ஆம் திகதி நிறைடைந்தது.

இதற்கமையதென் மாகாண சபையின் அதிகாரம் தென் மாகாண ஆளுநர் கீர்த்தி தென்னகோனின் கீழ் கொண்டுவரப்பட்டது.

இதேவேளைகிழக்குவட மத்திய,சப்ரகமுவ மாகாண சபைகளின் பதவிக்காலம் 2017 ஆம் ஆண்டு நிறைவடைந்ததுடன்வடமேல் மற்றும் வட மாகாண சபையின் பதவிக்காலம் 2018 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நிறைவடைந்தது.

இந்த நிலையில்ஜனாதிபதியும் பிரதமரும் அரசியல் மேடைகளில் மாகாண சபைத் தேர்தல்கள் குறித்து கருத்துத் தெரிவிக்கின்ற போதிலும்தேர்தலை நடாத்த வேண்டும் என்ற தேவை அவர்களுக்கு கிடையாது என பெப்ரல் அமைப்பு குற்றம்சாட்டியுள்ளது.

அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top