நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையை கருத்தில் கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன விஷேட செய்தி ஒன்றை விடுத்துள்ளார்.
நாட்டு மக்கள் அமைதியாகவும் பொறுப்புடனும் நடந்துகொள்ளுமாறு ஜனாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கட்டுக்கதைகள் மற்றும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அவர் கோரியுள்ளார்.
அதேநேரம் நாட்டின் நிலமையினை கருத்தில் கொண்டு இன்று மாலை அவசர கூட்டம் ஒன்று நடைபெற உள்ளது.

