(எம்.எம்.ஜபீர்)
சவளக்கடை மத்தியமுகாம் ஜம்மியத்துல் உலமா சபை அனைத்து பள்ளிவாசல்களுடன் இணைந்து ஏற்பாடு செய்த மழை வேண்டிய தொழுகை 5ஆம் கொளனி அமீர் அலி பொது மைதானத்தில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது.
இதன்போது சவளக்கடை மத்தியமுகாம் ஜம்மியத்துல் உலமா சபை தலைவரும், கல்முனை அல்-ஹமியா அரபிக் கல்லூரியின் அதிபருமான மௌலவி ஏ.சீ.தஸ்தீக் மதனி மழை வேண்டிய தொழுகையை நடாத்தி வைத்தார்.
அம்பாரை மாவட்டத்தில் வரட்சியான காலநிலை காணப்படுவதினால் விவசாய செய்கை, பயிர் செய்கை பாதிக்கப்படுவதையும், அதிக வெப்பத்தினால் சிறுவர்கள், முதியோர்கள் மற்றும் கால்நடைகள் பாதிக்கப்பட்டுவருவதை கவணத்தில் கொண்டு மழை கிடைக்க வேண்டி துஆப் பிரார்த்தனையும் இடம்பெற்றது.
இதில் பிரதேசத்திலுள்ள ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.




