அனுராதபுரத்தில் தொல்பொருள் அகழ்வு குற்றச்சாட்டில் ஆறு பேர் கைது

0

அனுராதபுரம் ஹொரோவபொதான பகுதியில் தொல்பொருள் அகழ்வு நடவடிக்கையில்  ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஆறு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சந்தேகநபர்கள்,நேற்று இரவு 11 மணியளவில் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
ஹொரோவபொதான காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலையடுத்தே,அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது அகழ்வுப் பணிக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்களையும் காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
துடுவெவ,பொலன்னறுவை மற்றும் தம்புள்ளை பகுதிகளைச் சேர்ந்த 31 வயதிற்கும் 54 வயதிற்கும் இடைப்பட்ட சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள்,ஈ அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தப்படவுள்ளதோடு,சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹெரோவபொதான காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top