பாரியளவு ஹெரோய்ன் போதை பொருளுடன் ஈரானிய கப்பல் ஒன்றை இலங்கையின் பாதுகாப்புத் தரப்பினர், கைது செய்துள்ளனர்.
இந்த ஈரானிய கப்பல் தெற்கு கடற்பரப்பில் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவல்துறை விசேட அதிரடிப் படையினர் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் மற்றும் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்தக் கப்பல் கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹெரொயினுடன் ஈரானிய பிரஜைகள் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கப்பலில் சுமார் 600 கிலோகிராம் ஹெரொயின் இருந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்ட சந்தர்ப்பத்தில் கப்பலில் இருந்தவர்கள் ஹெரொயினின் ஒரு பகுதியை கடலில் எறிந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கொழும்புத் துறைமுகத்திற்கு அழைத்துவரப்படவுள்ளனர்.

