க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் முதலிடம் பெற்ற மாவட்டம்!!

0

2018 ஆம் ஆண்டு கல்வி பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய நாட்டில் அதிக மாணவர்கள் சித்திப்பெற்றுள்ள மாவட்டமாக மாத்தறை மாவட்டம் பதிவாகியுள்ளது.


அந்த மாவட்டத்தில் 21 ஆயிரத்து 898 மாணவர்கள் சாதாரண பரீட்சையில் தோற்றியதுடன், அதில் 79.89 சதவீதமானோர் சித்தி பெற்றுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதில் இரண்டாவது இடத்தில் அம்பாந்தோட்டை மாவட்டம் உள்ளது.
அங்கு 16 ஆயிரத்து 872 மாணவர்கள் சாதாரண பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில், 79.24 சதவீதமானோர் அதில் சித்திப்பெற்றுள்ளனர்.

இதில் மூன்றாவது இடத்தில் கொழும்பும் மாவட்டமும், காலி மற்றும் குருநகால் மாவட்டமும் முறையே நான்காம் மற்றும் ஐந்தாவது இடங்களிலும் காணப்படுகின்றனர்.

இதேவேளை சாதாரண தரப் பரீட்சையில் குறைந்த அளவு மாணவர்கள் சித்தி பெற்றுள்ள மாவட்டமாக திருகோணமலை மாவட்டம் பதிவாகியுள்ளது.

அங்கு 14 ஆயிரத்து 291 மாணவர்கள் குறித்த பரீட்சையில் தோற்றியுள்ள நிலையில், அதில் 53.17 சதவீத மாணவர்களே சித்தி பெற்றுள்ளனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகின.
முதல் 10 இடங்களில் தமிழ் மொழிமூலம் தோற்றிய எந்தவித மாணவர்களும் இடம்பெறவில்லை.

இந்தநிலையில், கொழும்பு விசாகா மகளீர் கல்லூரியை சேர்ந்த நிலன்க திசிவாரி வருசவிதான அகில இலங்கை ரீதியாக முதலாம் இடத்தை பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் இடத்தை கொழும்பு விசாக மகளீர் கல்லூரியை சேர்ந்த கரசின்க ஆராச்சிகே சவிதி ஹன்சதியும், கம்பஹா ரத்னவலி மகளீர் கல்லூரியின் சஞ்சனி திலேகா குமாரியும், மாத்தறை சுஜாதா ராஹூல வித்தியாலத்தின் களுஆராச்சிகே கன்கனம்கே மினிதி ரெபேகா ஆகிய மூன்று பேர் பெற்றுக் கொண்டனர்.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சைக்காக ஆறு லட்சத்து 56 ஆயிரத்து 984 பேர் விண்ணப்பித்திருந்தனர்.

அதில் ஐந்து லட்சத்து 18 ஆயிரத்து 184 பேர் பரீட்சைக்காக தோற்றியிருந்தனர்.

இதில் 71.66 சதவீதமானோர் கல்விப் பொதுத்தராதர உயர் தரத்தை தொடர்வதற்கு தகுதி பெற்றுள்ளனர்.

இதில் 9 ஆயிரத்து 413 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top