வெயில் காலம் என்பதால் எல்லா இடங்களிலும் ஏசியின் பயன்பாடு அதிகரித்து வருகின்றது இது எம் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கானது என்கிறார்கள் குறிப்பாக சருமத்தில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சிவிடும்.
அதுமட்டுமல்லாது சருமம் வறட்சி அடைந்து . உதடுகளும் உலர்ந்து போய் விடும்.ஏசிக்கு நேராக முகத்தை வைத்து அமரக்கூடாதாம் அப்படி உட்கார்ந்தால் சைனஸ் தூண்டப்படும். மூக்கடைப்பு, தலைவலி, காது அடைத்தாற் போல இருப்பது ஆகிய பிரச்சனைகளை ஏற்படுத்தும்
ஏற்கனவே சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும நோய்கள் உள்ளவர்கள் ஏசியில் அதிக நேரம் அமர்ந்தால் நோய் இன்னும் அதிகமாகுமாம் அத்தோடு ஏசியில் அதிக நேரம் அமர்ந்திருப்பவர்களுக்கு தலைமுடி உதிர்வதற்கான வாய்ப்புக்களும் உள்ளது
ஏசியை முறையாக சுத்தம் செய்யாமல் பயன்படுத்துபவர்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்பட்டு சருமம் பாதிக்கும். அலுவலகத்தில் ஒருவருக்கு காய்ச்சல், அம்மை போன்ற நோய்கள் இருந்தால், அது மற்றவர்களுக்கும் எளிதில் பரவிவிடும்.இப்படி அனைவரும் விரும்பும் ஏசியால் ஏராளமான பிரச்சனைகளும் உண்டு.

