கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் இரண்டு பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து.

0

கொழும்பு - புத்தளம் பிரதான வீதியின் கலாஓயா பகுதியில் இரண்டு தனியார் பேருந்துகள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானமை காரணமாக, 6 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று முற்பகல் 11.45 அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடுகாயமடைந்தவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
கொழும்பிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த பேருந்து அநுராதபுரத்திலிருந்து கலா ஓயா நோக்கி பயணித்த மற்றுமொரு பேருந்துடன் மோதியே, இந்த விபத்து நேர்ந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இராஜாங்கனை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.  
Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top