ஜே.ஆர் ஜயவர்த்தன, பிரேமதாச, விஜயதுங்க, சந்திரிக்கா, மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச போன்ற ஜனாதிபதிகள் தவறவிட்ட சந்தர்ப்பத்தை தற்போதைய ஜனாதிபதியும் தவறவிடக்கூடாது என்று இலங்கையின் நாடாளுமன்றில் கோரப்பட்டுள்ளது
வடக்கு கிழக்கு, மலையக மக்களின் மனித உரிமைகள் தொடர்பான தனி ஆள் பிரேரணையை முன்வைத்து உரையாற்றிய யாழ்ப்பாண நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். ஸ்ரீதரன் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
முன்னதாக அவர் வடக்கு கிழக்கு, மலையக மக்கள் தொடர்பிலான தமது தனி ஆள் பிரேரணையை சபையில் முன்வைத்தார்.
இந்தநிலையில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இலங்கையில் உள்ளது என்பதை ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்னும் பகிரங்கமாக அறிவிக்கவில்லை என்று ஸ்ரீதரன் குறிப்பிட்டார்.