மூதாட்டியின் விபரித முடிவு
உறக்கமின்மை காரணமாக யாழில் மூதாட்டி ஒருவர் இன்று காலை தவறான முடிவெடுத்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
யாழ்ப்பாணம் - அரியாலை பகுதியைச் சேர்ந்த புஸ்பவதி விஜயரட்ணம் (வயது 75) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த மூதாட்டி உறக்கமின்மையால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று காலை தனக்குத் தானே தீ மூட்டி தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிரேம்குமார் மேற்கொண்டார்.
-யாழ். நிருபர் கஜிந்தன்-