வைத்தியர்களுக்கு ALS பயிற்சி செயலமர்வு
(றியாஸ் ஆதம்)
வைத்தியர்களின் திறனை மேம்படுத்தி வைத்தியசாலைகளின் ஊடாக தரமிக்க சிறந்த சேவைகளை வழங்கும் பொருட்டு, கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அந்தவகையில் கல்முனை பிராந்திய வைத்தியசாலைகளில் பணியாற்றும் வைத்தியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட மேம்பட்ட வாழ்க்கை ஆதரவு (ALS) மாரடைப்பு போன்ற முக்கியமான அவசர நிலைகளை நிர்வகிப்பது குறித்த பயிற்சி செயலமர்வொன்று (28) கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் இடம்பெற்றது.
கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சீ.எம்.மாஹிரினால் ஒருங்கிணைப்பு செய்யப்பட்ட இந்த பயிற்சி செயலமர்வு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் தலைமையில் இடம்பெற்றது.
அம்பாரை மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை வைத்திய நிபுணர் டொக்டர் சனத் பண்டார தலைமையிலான வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் இந்நிகழ்வில் வளவாளர்களாக கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கினர்.
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் இந்தப்பயிற்சி செயலமர்வு நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.