தம்பியை குத்தி கொலை செய்த மூத்த சகோதரன்

0

 


எலபாத, அலுபத்கல பகுதியில் மூத்த சகோதரன், தனது இளைய சகோதரனை கூரிய ஆயுத்தால் தாக்கி கொலை செய்துள்ளார்.


நேற்று (7) இரவு நடந்த இந்த சம்பவத்தில், 23 வயதுடைய அலுபத்கல, உடநிரிஎல்ல பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


உயிரிழந்தவரின் மூத்த சகோதரனுடன் ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதன் காரணமாக இந்த மரணம் நிகழ்ந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


எனினும், இந்தக் கொலையைச் செய்த சந்தேக நபரான மூத்த சகோதரன் மனநல நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக அவரது தாய் தெரிவித்துள்ளார்.


சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.


உயிரிழந்தவரின் சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.


தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய, எலபாத பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top