இந்தியாவில் புகழ்பெற்ற பாடகியாக இருப்பவர் ஸ்ரேயா கோஷல். ஹிந்தி மொழியை தாய் மொழியாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழியில் அசால்ட்டாக பாடி முடிப்பவர்.
தற்போது இவர் சினிமா பாடல்கள் பாடுவதை தாண்டி இசைக் கச்சேரிகளில் அதிகம் பாடி வருகிறார். ஸ்ரேயா கோஷல் Live In Concert சென்னையில் நேற்று (1) YMCA Groundல் நடைபெற்றது.
தற்போது இவர் இன்ஸ்டாவில் வெளியிட்டு இருக்கும் பதிவு தான் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தனது X தள கணக்கை யாரோ பிப்ரவரி 13ஆம் தேதியில் இருந்து ஹேக் செய்துவிட்டார்கள் என ஸ்ரேயா கோஷல் தெரிவித்து இருக்கிறார். கணக்கை மீட்க முயற்சி மேற்கொண்டாலும் முடியவில்லை என அவர் கூறி இருக்கிறார்.
அதனால் தனது X பக்கத்தில் வரும் பதிவுகள் மற்றும் லின்க்-களை மற்றும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் எச்சரித்து இருக்கிறார்.