சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த ஏ.பீ.எம். றமீஸ் சமபோஷா நிறுவனத்தினால் நடாத்தப்பட்ட அகில இலங்கை உதைபந்தாட்ட போட்டியில் இறுதிப் போட்டிக்கு நடுவராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சமபோஷா நிறுவனத்தின் அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய அகில இலங்கை ரீதியான 14 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாருக்குமான மாபெரும் உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி கடந்த 2025.02.01 மற்றும் 02ம், 03ம் திகதிகளில் வவுனியாவில் இடம்பெற்றது.
இப்போட்டிக்கு நடுவராக 20 பேர் பங்குபற்றி இருந்தனர் இதில் அம்பாரை மாவட்டத்தில் இருந்து நடுவராக சம்மாந்துறையைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஏ.பி.எம். றமீஸ் பங்குபற்றி இருந்தார்.
சமபோஷா நிறுவனத்தின் அனுசரணையில் அகில இலங்கை பாடசாலைகள் உதைப்பந்தாட்ட சம்மேளனம் நடாத்திய அகில இலங்கை ரீதியான 14 வயதிற்குட்பட்ட ஆண், பெண் இரு பாலாருக்குமான அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டி கொழும்பு சர்வதேச விளையாட்டு அரங்கமான றேஸ்கோஸ் மைதானத்தில் நாளை (07) வெள்ளிக்கிழமை இடம்பெறவுள்ளது.
குறித்த இறுதிப்போட்டிக்கு நடுவராக தெரிவு செய்யப்பட்ட 6 நடுவர்களில் சம்மாந்துறையைச் சேர்ந்த கிராம உத்தியோகத்தர் ஏ.பி.எம். றமீஸ் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி, போட்டி சமபோஷா நிறுவனத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.