பதவிய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஜூன் மாதம் 14 ஆம் திகதி பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (25) காலை கைது செய்யப்பட்டுள்ளதாக மொரகஹஹேன பொலிஸார் தெரிவித்தனர்.
மொரகஹஹேன பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் மொரகஹஹேன, கித்துலகன்த பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் பதவிய , பராக்கிரமபுர பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடையவர் ஆவார்.