இன்று முதல் விவசாயிகளுக்கு இழப்பீடு

0

 


கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஏற்ப்பட்ட வெள்ளப்பெருக்கினால் செய்கை நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் செயற்பாடு இன்று ஆரம்பிக்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

பொலன்னறுவை, முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை மாவட்டங்களிலும் இவ்வாறு இழப்பீடு வழங்கும் பணிகள் இடம்பெறவுள்ளதாக சபையின் தலைவர் பிரேமசிறி ஜாசிங்கஆராய்ச்சி தெரிவித்துள்ளார்.

இதற்கமைய விவசாயிகளின் வங்கி கணக்குகளுக்கு இழப்பீடு தொகை வைப்பிலிடப்படும். 13379 ஏக்கருக்கான இழப்பீடு இன்று வழங்கப்படவுள்ளது.

அத்துடன் இன்றைய தினம் நெற்செய்கை விவசாயிகளுக்கே இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top