பங்களாதேஷ் அரசாங்கத்தின் பணி ஒதுக்கீடு முறைமைக்கெதிராக மாணவர்களால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதையடுத்து, பங்களாதேஷின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு அவர் நாட்டை விட்டும் வெளியேறி இருந்தார்.
பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு இவர் தப்பிச் செல்லும் முன்னர், தனது பிரதமர் பதவியை ஷேக் ஹசீனா இராஜினாமா செய்ததாக தகவல்கள் வெளியாகின.
ஆனால், ஷேக் ஹசீனா பிரதமர் பதவியை இராஜினாமா செய்ததற்கான ஆவணங்கள் தன்னிடம் இல்லை என்று பங்களாதேஷ் ஜனாதிபதி முகம்மது ஷஹாபுதீன், கடந்த வாரம் வழங்கிய பேட்டி ஒன்றில் கூறியதையடுத்து பங்களாதேஷ் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டிள்ளது.
அவரின் குறிதா கருத்தினால் கொந்தளித்த மாணவர் அமைப்பினர், நேற்று முன்தினம் (22) முதல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறித்த மாணவர்கள் ஜனாதிபதி மாளிகையை முற்றுகையிட்டு சோராடுவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் மீது இராணுவத்தினர் நடத்தியுள்ளனக். குறித்த துப்பாக்கிச் சூட்டில் 03 பேர் காயமடைந்தனர். அதன் பின்னர், பெரும் போராட்டத்துக்குப் பின்னர் நிலைமை ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், முகமது ஷஹாபுதீனை ஜனாதிபதி பதவியிலிருந்து விலகுமாறு மாணவர் அமைப்பினர் தொடர்ந்தும் போராட்டம் நடாத்தி வருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
