வீழ்ச்சியடைந்த நாட்டை கட்டியெழுப்பிய போதிலும் மக்கள் எனக்கு வாக்களிக்காதது பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
தனது ஆதரவு பாராளுமன்ற உறுப்பினர்களை தனது வீட்டிற்கு அழைத்து கலந்துரையாடிய போதே இதனை இவ்வாறு தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் தனக்கு ஆதரவாக செயல்பட்டாலும் மக்கள் என்னை நிராகரித்துள்ளனர்.
நாடு அதாள பாதாளத்திற்கு சென்ற போது அதை சீர் செய்வதற்கு நான் தேவைப்பட்டேன் ஆனால் எனக்கு வாக்களிக்கவில்லை.
இருந்த போதும் பொதுத் தேர்தல் மிக விரைவில் நடைபெற உள்ளதால் நாம் அதற்கு இப்போதே தயாராக வேண்டும் என்றார்.