தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம் பகிர்ந்த சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் ரத்மலே திஸ்ஸ கல்லூரியின் பரீட்சை நிலையத்தில் கடமையாற்றிய தலைமை ஆசிரியர், கண்காணிப்பாளர் மற்றும் ஆசிரியர் ஒருவரை பணி இடைநீக்கம் செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வடமத்திய மாகாண பரீட்சைகளுக்குப் பொறுப்பான பிரதிக் கல்விப் பணிப்பாளரினால் வழங்கப்பட்ட அறிக்கையில் இந்தப் பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், மாகாணக் கல்விப் பணிப்பாளர் அமுல்படுத்துவதற்கான பரிந்துரைகளை அங்கீகரித்து மாகாணக் கல்விச் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் பரீட்சைத் திணைக்களம் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஏற்கனவே விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.