வைரமுத்து மீது பிரபல பாடகி பாலியல் குற்றச்சாட்டு. வைரமுத்துவிடமிருந்து கிடைத்த பரிசு என்ன தெரியுமா?

 


மலையாள சினிமாவில் பாலியல் ரீதியாக எழுந்த பிரச்சினைகளால் முன்னணி நடிகர்கள் பலரின் பெயர்கள் வெளிவந்ததையடுத்து, தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல் தொடர்பான புகார்கள் எழுந்த வண்ணமுள்ளன.


இந்நிலையில், பிரபல பாடகியும் நடிகையுமான சுசித்ரா சமீபத்தில் தனியார் சேனலுக்கு பேட்டியொன்றை வழங்கியிருந்தார். குற்தித்த நேர்காணலில், வைரமுத்துவை பொறுத்த வரைக்கும் பாடகிகளைத்தான் முதலில் குறி வைப்பார். அதிலும் நான் "மே மாதம் 98 இல் மேஜரானேனே" பாடலை பாடியிருக்கிறேன். அப்பாடலைக் கேட்ட பிறகு வைரமுத்து எனக்கு போன் செய்து 'உன் பாடலில் காமம் இருக்கிறது; ஒரு காதல் இருக்கிறது; உன்னுடைய வாய்ஸ் ரொம்ப அற்புதமாக இருக்கிறது.' என்று பேசியதாக தெரிவித்துள்ளார். இப்படித்தான் அவர் பெண்களை வலையில் விழ வைப்பாராம்.


அப்பாடலில் காதல் இருக்கிறது என்றால், அதில் ஆடிய ரீமாசென்னைப் பார்த்து காதல் வரலாம். அப்பாட்டைப் பற்றி அவ்வளவு பெருமையாக கூறும் போதே நமக்கு தெரிந்து விடும், ஏதோ ஒன்னுக்கு இவர் ஆசைப்படுகிறார் என்று.


அது மட்டுமின்றி, வீட்டுக்கு வா, உனக்கு நான் பரிசு தருகிறேன் என்றார்; நான் என் பாட்டியுடன் போயிருந்தேன். நீ தனியா வருவாய் என்று எதிர் பார்த்தேன் என்று வைரமுத்து கூறினார். இல்லை, நான் எங்கு போனாலும் பாட்டியுடன்தான் வருவேன் என்றேன்.

அவருடைய நோக்கம் நான் வந்ததும் என்னை தொடவேண்டும். தொட்டுப் பார்த்து ஆசைப்பட வேண்டும் என்பதுதான். ஆனால், அது நடக்கவில்லை.


அதன் பின்னர், என் பாட்டி வைரமுத்துவிடம் "உங்களைப் போன்றவர்களால்தான் இந்த மாதிரி பிள்ளைகள் சினிமாவில் நிலைத்து நீடிக்க முடியும். நீங்கள் அடுத்த தலைமுறைக்கு ஒரு தந்தை போல என்று சொன்னதும் வைரமுத்துவுக்கு வியர்த்து விட்டது.


உடனே, என்னுடைய பாட்டி "பரிசு தருகிறேன் என்று சொன்னீர்களாம். பரிசு எங்கே?" என கேட்டார். வீட்டுக்கு பின்னாடி சென்று அங்கிருந்த இரண்டு ஷாம்பு பாட்டில்களை (Shampoo Bottles) எடுத்து வந்து கொடுத்தார்.


அதன் பிறகு நாம் அங்கிருந்து வந்துவிட்டோம். இருந்தாலும், தொடர்ந்து அவர் தரப்பிலிருந்து எனக்கு தொலைபேசி அழைப்பு வந்து கொண்டே இருந்தது. நான் கட் பண்ணி விடுவேன்" என குற்றச் சாட்டொன்றை முன்வைத்துள்ளார். இது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section