ஸெய்ன்ஸித்தீக்
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று நாடு பூராகவும் காலை 9.30 மணி முதல் மதியம் 12.15 மணி வரை நடைபெறும். அதன்படி, நாடு முழுவதும் 2,849 தேர்வு மையங்களில் இப்பரீட்சை நடைபெறுகின்றது.
இறக்காமம் கல்விக் கோட்டத்தில் உள்ள றோயல் கனிஷ்ட கல்லூரியிலிருந்து 109 மாணவர்கள் இப் பரீட்சையில் தோற்றுகின்றார்கள்
மாணவர்கள் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதற்கு முன்னர் மத அனுஷ்டானப்படி துஆப் பிரார்த்தனை நிகழ்வொன்றும் கல்லூரியின் அதிபர் எம். ஏ. எம் பஜீர் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. துவா பிரார்த்தனையை இறக்காமம் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலின் கடமையாற்றும் மௌலவி.ஏ.ஸெய்யித் அஹமத் (ஸர்கி) அவர்களினால் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றது.
தேசிய ரீதியாக நடைபெற்று வரும் இப்பரீட்சைக்குத் தோற்றும் அனைத்து மாணவர்களும் சித்தியடையவேண்டும் என்று எமது ஊடக மையத்தினால் வாழ்த்துகின்றோம்.