தான் இன்னும் எந்தவொரு கட்சியிலும் இணைந்துகொள்ளவில்லை எனவும், மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றக்கூடிய கட்சி ஒன்றில் இணைந்து செயற்படப் போவதாகவும் றிஸ்லி முஸ்தபா தெரிவித்தார்.
கல்முனையில் சனிக்கிழமை (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
2020ஆம் ஆண்டு மொட்டுக் கட்சியின் ஊடாகவே அரசியலுக்குள் வந்தேன். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் போட்டியிட்டேன். அந்த தேர்தலில் 5000பேர் எனக்கு வாக்களித்திருந்தனர். மொட்டுக் கட்சியில் பயணித்த 2வருடங்களும் என்னால் முடியுமான பணிகளை செய்துள்ளேன்.
என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையிலே தான் Risley Musthafa Education Aid என்கின்ற அமைப்பினை உருவாக்கினேன். அம்பாரை மாவட்டத்தில் வாழ்கின்ற வறிய மக்களுக்கு அதிகமான தேவைகள் உள்ளது. அந்த மக்களுக்கு கல்வி உள்ளிட்ட பல்வேறு உதவிகளை செய்வதற்கும் திட்டமிட்டுள்ளேன்.
முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்கள், நாட்டில் ஏற்பட்ட அரகல, நாட்டுக்கு ஏற்பட்ட வங்குரோத்து நிலை ஆகியவற்றினால் மொட்டுக் கட்சியில் இருந்து ஒதுங்கியிருந்தேன். மக்களின் தேவைகளை அறிந்து சேவையாற்றக்கூடிய கட்சி ஒன்றில் இணைந்து செயற்படவுள்னே் என்றார்.