க.பொ.த சாதாரண பரீட்சை மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு




க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்ததும் விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளை 2 நிலைகளின் கீழ் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.


அதற்காக 35,000 ஆசிரியர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.


உயர்தர வகுப்புகள்

இதேவேளை தற்போது நடைபெற்றுவரும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை நிறைவடைந்த 2 வாரங்களுக்குள் அந்த மாணவர்களுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர வகுப்புகளை ஆரம்பிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.


கோவிட் தொற்றுக் காலத்தில் ஏற்பட்ட கல்விச் செயற்பாடுகளின் பின்னடைவை சீர்செய்யும் முகமாக இந்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section