ஜனாதிபதி தேர்தலுக்காக ஆலோசிக்கப்பட்டுள்ள சாத்தியமான திகதிகள்

 இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் அக்டோபர் 5 அல்லது 12 ஆம் திகதி நடத்தலாம் என்று ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


தேர்தல்கள் ஆணையம், தேர்தலை நடத்துவதற்கான சாத்தியமான இந்த திகதிகள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளது.


அத்துடன், இந்த இரண்டு நாட்களும் சனிக்கிழமைகள் என்ற அடிப்படையிலும் சாத்திய ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


வேட்புமனு தாக்கல்

முன்னதாக கடந்த வாரம், தேர்தல் ஆணையக அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அரசியலமைப்பின் விதிகள் மற்றும் 1981ஆம் ஆண்டின் ஜனாதிபதி தேர்தல் சட்டத்தின்படி, இந்த ஆண்டு செப்டம்பர் 17 முதல் ஒக்டோபர் 16 வரை ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.


சட்டப்படி, இந்த ஆண்டு ஜூலை 17ஆம் திகதிக்கு பின்னர் வேட்புமனுத் தாக்கல் திகதியை அறிவிக்க தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரம் உள்ளது.தேர்தலுக்கான செலவு

அறிவிப்பு வெளியான 16 முதல் 21 நாட்களுக்குள் வேட்புமனுக்கள் பெறப்பட வேண்டும். விதிகளின் கீழ், பிரசாரத்திற்கு குறைந்தபட்சம் 28 நாட்களும் அதிகபட்சம் 42 நாட்களும் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க (Saman Sri Ratnayakke) தெரிவித்துள்ளார்.


இதேவேளை, ,ஆணையகம், 10 பில்லியன் ரூபாயை தேர்தலுக்காக கோரியுள்ளதாகவும் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.எனினும், வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தால் செலவுகள் அதிகமாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section