தென்மேற்கு ஆசியாவைச்சூழும் போர் மேகங்கள்?

 


கலாநிதி றவூப் ஸெய்ன்

கடந்த வார இறுதியில் ஈரான் இஸ்ரேல் மீது மேற்கொண்ட பொலிஸ்டிக் மற்றும் குரூஸ் ஏவுகணை தாக்குதலுக்கு டெல் அவிவ் எப்படியும் பதிலளிக்கும் என்கிறார் நெடன்யாஹூ. ஜெரூஸலம் ஹோட்டலில் நேற்றைய தினம் பிரிட்டிஷ் வெளிவிவகார செயலாளர் டேவிட் கெமரூனிடம் இதை வலியுறுத்தியதாக கெமரூன் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்து CNN, BBC. Rueter ABC என மேலைய இஸ்ரேல் ஆதரவு ஊடகங்களின் செய்திகளை விழுங்கிவரும் நிலையில் மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. 


சில ஊடகங்கள் இந்தப்பதற்றம் முழுப்பிராந்தியத்தையும் ஒரு கொடூரமான போருக்குள் தள்ளலாம்.இறுதியில் அது உலகப்போராக மாறலாம் என்றவாறு பில்ட் அப் பண்ணுவதும் கண்கூடு. பொதுவாக ஊடக நிறுவனங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் இது போன்ற செய்திகள் எப்போதைக்கும் முக்கியமானதுதான் . கிளுகிளுப்பு ஊட்டுவதும் செயற்கையான பயங்களை உற்பத்தி செய்வதும்தான் அவற்றின் தொழில். ஆச்சரியமளிக்காத, வழமையான மற்றொரு தொழிலையும் மேலைய ஊடகங்கள் இப்போதிருந்தே ஆரம்பித்துவிட்டன. இஸ்ரேலே ஆய்த பலத்தில் முன்னிற்பதான ஒரு build up யும் அவை அவை செய்துவருகின்றன.



இஸ்ரேலுக்கு வருடாந்தம் பாதுகாப்பு மானியமாக 4 பில்லியன் டாலர்களை வழங்கிவந்த/ கடந்த ஆண்டில் அதனை 10 பில்லியனாக அதிகரித்த இஸ்ரேலின் நெருங்கிய சகா வொஷிங்டன் ஈரான் மீதான பதிலடித்தாக்குதலுக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை என அறிவித்துள்ளது . ஜோ பைடனின் தெளிவான நிலைப்பாடு இதுவே, ஆனால் அமெரிக்காவிலுள்ள ஸியோனிஸ லொபியான AIPAC இன் நிலைப்பாடு மாறுபட்டது. வொஷிங்டன் ஈரான் விடயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்கிறது அது. மத்திய கிழக்கின் பெரும்பான்மையான அறபு நாடுகளிலுள்ள அமெரிக்க இராணுவத்தளங்கள் ஈரானால் குறிவைக்குப்படுவதை தடுப்பதே பைடனின் பிரதான அக்கறையாகவுள்ளது.


பிரிட்டிஷ் முன்னாள் பிரதமரும் இன்னாள் வெளியுறவுச்செயலாளருமான (வெளிநாட்டமைச்சர்) டேவிட் கெமரூன் தீவிர ஸியோனிஸ ஆதரவாளர்.அவர் ஈரான் வழங்கிய பதிலடி சற்று அதிகமானது என்பதால் இஸ்ரேலுக்கு திருப்பித்தாக்கும் உரிமையுள்ளது என்கிறார். ஆனால் இந்தப்போரில் தமது நாடு இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று வழமையான அவரது ஸியேனிஸ ஆதரவை வெளிப்படுத்தியுள்ளதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. பிரான்ஸின் மெக்ரோன் ஜேர்மனியின் மார்க்கல் போன்றோர் எப்போதும் இரட்டை நிலைப்பாடு கொண்டவர்கள். இறுதியில் இஸ்ரேல் பக்கமே நிற்கக்கூடியவர்கள். பொதுவாக மேலை நாடுகள் இப்படியொரு போரை ஆதரிக்கவில்லை.


ஆனால் இஸ்ரேல் தனித்து சுயமானதும் சுதந்திரமானதுமான முடிவை இஸ்ரேல் எடுக்கும் என்கிறார் நெடன்யாஹூ. ஈரான் மீது ஒரு மூர்க்கமான அச்சம் கொள்ளத்தக்க பதில் தாக்குதலை நாம் மேற்கொள்வோம் என்கிறது மொஸாட். ஆனால் எப்போது எப்படி ஈரான் திருப்பியடித்தால் தடுப்பதற்கான தந்திரோபாயம் என்ன என்பதெல்லாம் இன்னும் தீர்மானிக்கப்படவில்லை என்கிறது அந்தக்கள்ளக் கழுகு.


உண்மையில் war monger என வர்ணிக்கப்படும் நெடன்யாஹு வுக்கு யாரையேனும் இஸ்ரேலின் எதிரியாக நிலைநிறுத்தவும் அதனுடன் போர் செய்யவுமான அரசியல் தேவை தவிர்க்க முடியாதது. போதாக்குறைக்கு அவர் ஒரு போர்த்தளபதி இராணுவப் பயிற்சி பெற்றவர். ஊழல் பெருச்சாளி அந்தக்குற்றச்சாட்டுகளிலிருந்து தப்பிக்க அவருக்கு போர்தான் ஒரே ஆய்தம்.அதனால் அந்த மிருகம் கர்ச்சித்துக்கொண்டே இருக்கிறது. 


இப்போது மத்திய கிழக்கில் நடக்கும் அத்தனை நகர்வுகளையும் கூட்டிக்கழித்தால் ஈரான் மீதான ஒரு பதில் தாக்குதலுக்கு இஸ்ரேல் தயாராகி வருகிறது என்பது பலகேணங்களிலிருந்தும் உறுதியாகிறது. அந்தத்தாக்குதல் ஈரானிடமிருந்து பதில் தாக்குதல்களைக் கொண்டு வருமா? முழு வீச்சில் ஒரு பிராந்தியப்போர் மூழுமா என்பதே இப்போது பலரையும் குடைந்து கொண்டிருக்கும் கேள்வி.


இஸ்ரேல் என்ன வகையான தாக்குதல்களைக்கட்டவிழ்க்கப்போகிறது அதற்கு ஈரான் எப்படிப் பதிலளிக்கப் போகிறது என்பதைப்பொறுத்தே பிராந்தியப்போருக்கான சாத்தியப்பாடுகளை கணிக்க முடியும் என்கிறார்கள் இராணுவத்துறை ஆய்வாளர்கள். ஈரானின் புரட்சிகர இராணுவத்தின் படைத்தளம். அணுவுலை ஆராய்ச்சி மையம்.Bonab automatic research centre என்பனவே தனது குறியாக இருக்கும் என மொஸாட் முன்னாள் தலைவர் sima shine எதிர்வு கூறியுள்ளார். 


ஆனால் இஸ்ரேல் காஸாவில் விட்ட அதே மூலோபாயத்தவறைத்தான் இங்கே விடத்துடிக்கிறது என்ற பைடனின் கணிப்பில் ஓரளவு நியாயம் உள்ளதாகவே தோன்றுகிறது. ஈரானின் புவியியல் பலம்,மக்கள் பலம், படைப்பலம் ,ஆயுதப்பலம் போன்றவற்றை டெல் அவிவ் குறைத்து மதிப்பிடுவதிலிருந்தே இஸ்ரேலின் இராணுவ உளவியல் ஆரம்பிக்கிறது.


களத்தில் யார் உண்மையில் பலசாலிகள்? மேலை நாடுகள் எதை ஊக்குவிக்கின்றன? ஈரானின் சாதகமான பக்கங்கள் என்ன? இஸ்ரேலின் சாதகமான பக்கங்கள் என்ன?  இப்படி ஒரு போர் மூண்டால்  அது மத்திய கிழக்கை எப்படி முகாம்களாகப்பபிரிக்கும் ஆபத்து உள்ளது? ரஷ்யா மூன்று மாதத்தில் முடித்து வெற்றி பெறலாம் என்று களமிறங்கிய உக்ரைன் -ரஷ்யப்போர் இன்னும் நீடிக்கும் நிலையில் உலகம் இன்னொரு போரை எதிர்கொள்ளும் நிலையிலுள்ளதா? 


வான் வழிப்பயணத்தூரம் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் சுமார் 1750 கி.மீட்டர் என்றிருக்கு முழுக்க முழுக்க ஒரு வான்வழி யுத்தமே சாத்தியமாகிறது. அது எந்தளவுக்கு நீளும்? காஸா போரை அது எப்படிப்பா திக்கும்? இப்படி சங்கிலித் தொடரான கேள்விகளை எழுப்பும் இந்தப்புதிய பதற்றம் குறித்து இன்னும் ஆழமாக நோக்குவோம்.இன்ஷா அல்லாஹ்.




Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section