நாட்டுக்கு ஆபத்தாகும் ராஜபக்சர்களின் செயற்பாடு: சாணக்கியன் எச்சரிக்கை

 



ஜனாதிபதி தேர்தல் காலத்தில் ராஜபக்சர்கள் விகாரைகளை சுற்றிதிரிந்தால் அது  இந்த நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமை என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.


மேலும், ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றால் இந்த நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிப்பவர்களாக தமிழர்கள் இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.


மட்டக்களப்பில் நேற்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், 


கிளிநொச்சிக்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம்.


ராஜபக்சர்களின் எதிர்காலம்



ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயகப்பினை ஜனாதிபதிவேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப்போகின்றார்?


கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார் என்பதே தற்போதுள்ள பிரச்சினை. 


இன்று மொட்டு கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்சர்களின் எதிர்காலத்திற்காகும்.


மொட்டுக்கட்சிக்குள் குழப்பம் 

அது சிறிலங்கா பொதுஜன பெரமுன என்பதை விட சிறிலங்கா ராஜபக்ச பெரமுன என்று அக்கட்சிக்கு பெயரை வைத்திருக்காலம்.


இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது. அந்த கட்சியில் உள்ள ஒரு சிலருக்கு அமைச்சு பதவிகளை வழங்கி அதில் சிலர், அமைச்சர்கள் பாரிய மோசடிகளில் ஈடுபட்டு இன்று ரணில் விசுவாசிகளாக மாறியுள்ளனர்.


இந்த நிலையில் இந்த மொட்டுக்கட்சிக்குள் குழப்பம் ஏற்பட்டிருக்கின்றது. இன்று நாமல் ராஜபக்ச தனது தந்தையினைப்போன்று கும்பிடுபோட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றிதிரிகின்றார்.இவர்கள் விகாரைகளை சுற்றிதிரிவதே இந்த நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமை" என்றார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section