இறக்காமம் அறபா நகர் வீடுகளுக்கு சூரிய சக்தி மின் இணைப்பு

0

 


இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட குடுவில் அறபா நகர் பகுதியில் மிக நீண்ட காலமாக மின்சார வசதி இல்லாமல் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்த சுமார் 35 குடும்பங்களுக்கு தனவந்தர்களால் இலவசமாக சூரிய சக்தி மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.



குறித்த 35குடும்பங்களுக்குமான மின் இணைப்பினை உத்தியோகபூர்வமாக வழங்கும் நிகழ்வு இன்று (05) தேசமானிய, தேசகீர்த்தி எஸ்.எம். சன்சீர் தலைமையில் இடம்பெற்றது.



இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் சகீலா இஸ்ஸடீன் மற்றும் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஷான் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும், கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.சி.எம்.மாஹீர், இறக்காமம் பொலீஸ் நிலைய உப பொலீஸ் பொறுப்பதிகாரி எம்.ஐ. ஜஃபர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.



பிரபல சமூக செயற்பாட்டாளர்  ஜிப்ரியின் முயற்சியினாலும், எஸ்.எம்.சன்சீர் அவர்களுடைய ஒத்துழைப்புடனும் குறித்த மின் இணைப்பு வழங்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு இன்று மக்கள் பாவனைக்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.







Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top