சிம்பு சூட்டிங் ஸ்பாட்டில் செய்யும் அக்கபோரு.. ஆரம்பத்தில் இருந்தே பிடிக்காமல் கட் பண்ணும் 2 ஹீரோக்கள்

 


சிம்பு மாநாடு படத்திற்கு பிறகு மொத்தமாக மாறி இருந்தார். முன்பெல்லாம் சூட்டிங் சரியாக போக மாட்டார். அதோடு தேவையில்லாத சர்ச்சையில் சிக்கியும் கேட்ட பெயரை எடுத்து வந்தார். ஆனால் மாநாடு வெற்றிக்கு பிறகு எல்லாவற்றையும் சரியாக செய்ய ஆரம்பித்துவிட்டார்.


இப்போது பழைய குறுடி கதவ திறடி என்பது போல பழைய பாணியை மீண்டும் செய்து வருகிறார். சூட்டிங் ஸ்பாட்டில் சிம்பு செய்யும் அக்கபோரு ஓவராக இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.


சிம்பு இப்போது ராஜ்கமல் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். இந்நிலையை சூட்டிங் ஸ்பாட்டுக்கு சிம்பு வரும் போது ஆறு, ஏழு பவுன்சர்ஸ் உடன் தான் வருகிறாராம்.


அதுமட்டுமல்லாமல் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்பது போல ஆட்டிட்யூட் காட்டி வருகிறார். இந்நிலையில் மணிரத்தினம் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படத்தில் துல்கர் சல்மான் நடித்து வந்தார்.


அவரது கால்ஷுட்டில் பிரச்சனை காரணமாக தக் லைஃப் படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அவருக்கு பதிலாக சிம்பு இந்த படத்தில் கமிட்டாகி இருந்தார். ஆனால் சிம்புவின் ஆட்டிட்யூட் ஜெயம் ரவி மற்றும் அருண் விஜய் போன்ற நடிகர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லையாம்.


இதனால் தான் சிம்பு தக் லைஃப் படத்தில் கமிட்டான உடன் ஜெயம் ரவி வெளியேறிவிட்டார் என்றும் கூறப்படுகிறது. இப்போது தான் சிம்பு தொடர்ந்து ஹிட் படம் கொடுத்து வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறார். தேவையில்லாத பந்தா காட்டி கெடுத்து கொள்ள போகிறாரோ என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section