உடற்பயிற்சி கூடத்தில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் ஜோடி தொடர்பான செய்தி வௌியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பகுதியை சேர்ந்த ஜோடி பெல்லா மாண்டோவானி- வாக்னர் ஒபெரா.
இந்த ஜோடியினர் தங்கள் உடற்பயிற்சி கூடத்தில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர்.
அவர்கள் அங்கு நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.
மேலும் அதிக கலோரிகள் கிடைத்ததாகவும், இந்த முயற்சி தங்களின் பிணைப்பை வலுப்படுத்த உதவியது மட்டுமின்றி, உடல் தகுதிக்கும் பங்களித்ததாக ஜோடியினர் தெரிவித்தனர்.
இது குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய நிலையில், பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.