அரச நிறுவனங்களில் இன்று புதுவருட நிகழ்வுகள்

A.Mohamed Sabry
புத்தாண்டு தொடக்கத்தை இன்று (01) சகல அரச ஊழியர்களின் பங்கேற்புடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்குமாறு, அராசங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பில், அமைச்சின் செயலாளர்கள், மாகாண செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் சட்ட சபைகளுக்கு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர், சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். இதன் பிரகாரம் உத்தியோகபூர்வ வைபவம் இன்று முற்பகல் 09.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது

பொதுமக்களுக்கு வினைத்திறனுள்ள அரச சேவையை வழங்குவதற்கு முழு அரச ஊழியர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்பதனால் தேசிய, மாகாண, மாவட்ட மற்றும் உள்ளூராட்சி மட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சகல அரச நிறுவனங்களிலும் இந்நிகழ்வு நடத்தப்பட வேண்டுமென பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.


இதன்போது அரச ஊழியர்கள் அனைவரும் அரச சேவை உறுதிமொழியை வழங்க வேண்டும் எனவும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section