'ஜெயிலர்' படத்திற்கு சமமாக 'லால் சலாம்' செய்யும் மரண மாஸ் சம்பவம்: காரணம் தலைவர்.!









பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 'லால் சலாம்' படத்தின் ரிலீஸ் பிப்ரவரி மாதத்திற்கு தள்ளிப்போயுள்ளது. இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்துள்ளது ரசிகர்கள் இடையில் எதிர்பார்ப்பினை எகிற வைத்துள்ளது. இந்நிலையில் 'லால் சலாம்' படம் குறித்து லேட்டஸ்டாக வெளியாகியுள்ள தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது.


லால் சலாம்' படத்தில் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளதால் ரசிகர்கள் இடையில் இப்படத்திற்கு எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.


ரஜினி நடிப்பில் கடைசியாக கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'ஜெயிலர்' படம் வெளியானது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள திரையுலக பிரபலம் மோகன்லால் மற்றும் பாலிவுட் பிரபலமான ஜாக்கி ஷெரப் உள்ளிட்ட பல மொழிகளை சார்ந்த முன்னணி நடிகர்கள் ஜெயிலரில் கெஸ்ட் ரோலில் நடித்திருந்தனர். இதனால் பான் இந்திய ரிலீசாக வெளியாகி 'ஜெயிலர்' ரூ. 600 கோடி வசூலித்து சாதனை படைத்தது.


இப்படத்தினை தொடர்ந்து தற்போது த.செ. ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' படத்தில் நடித்து வருகிறார். இதனிடையில் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள 'லால் சலாம்' படத்திலும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார் ரஜினிகாந்த். 3, வை ராஜா வை படங்களை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் டைரக்ஷன் பக்கம் திரும்பியுள்ள ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' படத்தை இயக்கியுள்ளார்.


கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அத்துடன் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 'லால் சலாம்' படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். மேலும், இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கெஸ்ட் ரோலில் ரஜினி நடித்துள்ளார்.


முன்னதாக 'லால் சலாம்' படத்தினை பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய படக்குழுவினர் முடிவு செய்திருந்தனர். ஆனால் ஒரு சில காரணங்களால் திட்டமிட்டப்படி வெளியிடப்படவில்லை. இதனையடுத்து இப்படம் வரும் பிப்ரவரி 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில் 'லால் சலாம்' படத்தின் ப்ரீ பிசினஸ் குறித்து லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.


அதன்படி 'லால் சலாம்' படத்தின் கேரளா வெளியீட்டு உரிமை ரூ. 4 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயிலரும் இதே தொகைக்கு பிசினஸ் ஆன நிலையில் தற்போது 'லால் சலாம்' படமும் ரூ. 4 கோடிக்கு பிசினஸ் ஆகியுள்ளதாக கூறப்படுகிறது. ரஜினி இப்படத்தில் நடித்துள்ளது தான் இதற்கான காரணம் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்னதான் ரஜினி கெஸ்ட் ரோலில் நடித்திருந்தாலும், பொதுவாக அவரின் படங்களுக்கு ரசிகர்கள் இடையில் நிலவும் அளவிற்கான எதிர்பார்ப்பு லால் சலாமுக்கும் நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section