இந்தியாவின் அசாமில் நிலநடுக்கம்: தொடர் அதிர்வுகளால் அச்சம்

 


இந்திய மாநிலம் அசாமில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அசாம் மாநிலம் - தேஸ்பூரில் இன்று (27.12.2023) அதிகாலை 5:55 மணிக்கு இந்நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

குறித்த நிலநடுக்கம் தேஸ்பூருக்கு கிழக்கே 42 கிமீ தொலைவில் 20 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ளது.

தேசிய நில அதிர்வு மையம்

வடகிழக்கு மாநிலமான அசாமில் கடந்த நவம்பர் 8ஆம் தேதி 4.1 ரிக்டர் அளவிலும் 26 ஆம் தேதி 3.0 ரிக்டர் அளவிலும் நிலநடுக்கம் ஏற்பட்டிருந்தது.

இந்தியாவின் அசாமில் நிலநடுக்கம்: தொடர் அதிர்வுகளால் அச்சம் | Earth Quick In India Asam

இந்நிலையில், இன்றைய தினம் ரிக்டர் அளவுகோலில் 3.4 ஆகப் நிலநடுக்கமானது பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் பொருட் சேதமோ அல்லது உயிர்சேதமோ ஏற்பட்டதாக எந்தவித தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை.

இந்த மாத தொடக்கத்தில், அஸ்ஸாமின் கௌகாத்தியில் 3.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section