சுனாமி நினைவு தின பிரார்த்தனைகளும், ஆராதனை நிகழ்வுகளும்.

 


நூருள் ஹுதா உமர். 


உலகை உலுக்கிய அனர்த்தங்கள் பல இருக்கிறது. அதில் சுனாமி அலையின் தாக்கம் தசாப்தங்கள் பல கடந்தும் அழியா நினைவுகள் கொண்டது. அந்த சுனாமியலையில் சிக்கி எமது நாட்டின் பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த பல ஆயிரக்கணக்கான உயிர்கள் காவுகொள்ளப்பட்டது. அதில் அம்பாறை மாவட்டத்தின் பாதிப்பு மிக அதிகம். உயிர்கள், உடமைகள், சொத்துக்கள் என பலதையும் இழந்து நின்ற மக்கள் தமது துயரநாளின் 19 வருடங்கள் கடந்துள்ளதை எண்ணி துஆ பிராத்தனைகள், நினைவஞ்சலிகள் நாடுமுழுவதிலும் நடந்து வருகிறது. 



அதன் ஒரு அங்கமாக மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு ஏற்பாடு செய்த துஆ பிராத்தனை மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பு மண்டபத்தில் அமைப்பின் தலைவர் ஏ.எல்.எம். அன்வர் தலைமையில் நடைபெற்றது.



இந்நிகழ்வில் குரான் ஓதி தமாம் செய்யப்பட்டதுடன் அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் முன்னாள் பிரதம இமாம் மௌலவி ஏ. எல். எம். மின்ஹாஜ் (உஸ்மானி) துஆ பிராத்தனை செய்தார். நினைவுரையை மௌலவி ஏ. எல். எம். அலீம் (காஸிமி) நிகழ்த்தியதுடன். இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலாளர் எஸ். ஜெகராஜன், கிழக்கின் கேடயம் பிரதானியும், கிழக்கு மாகாண அனைத்து பள்ளிவாசல் சம்மேளன நிறைவேற்று சபை உறுப்பினருமான எஸ்.எம். சபீஸ், கிழக்கு மாகாண கூட்டுறவு ஊழியர்கள் ஆணைக்குழு உறுப்பினரும், மாளிகைக்காடு அந் நூர் ஜும்மா பள்ளிவாசல் உப செயலாளருமான யூ.எல்.என். ஹுதா, மாளிகைக்காடு கிழக்கு கிராம நிலதாரி ஏ.எம். நஜீம், அந்-நூர் ஜும்மா பள்ளிவாசல் தலைவர் ஏ. பௌஸர், அரச அதிகாரிகள், அந்நூர் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாகிகள், குரான் மதரஸா நிர்வாகத்தினர், பொது அமைப்புக்களின் பிரதானிகள், மாணவர்கள், ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள், சமூக பிரதிநிதிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர். 



சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு மர நடுகையும் இங்கு இடம்பெற்றது.


அல்- மீஸான் பௌண்டசன், ஸ்ரீலங்கா. ஏற்பாடு செய்த நினைவுதின நிகழ்வுகள் சாய்ந்தருதில் அமைப்பின் தவிசாளரின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் துஆ பிராத்தனை இடம்பெற்றதுடன் நினைவுரையும் இடம்பெற்றது.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Section